விஐபி பாதுகாப்பு பணியிலிருந்து கறுப்பு பூனை படை முழுமையாக விலகல்: சிஆர்பிஎப் பொறுப்பேற்கிறது

1 month ago 5

புதுடெல்லி: கடந்த 2020ல் இருந்து விஐபி பாதுகாப்பு பணிகளில் இருந்து கறுப்பு பூனை படையை ( என்எஸ்ஜி) விலக்கிக் கொள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதன்படி, இறுதியாக 9 இசட் பிளஸ் பிரிவு விஐபிக்களின் பாதுகாப்பு பொறுப்பிலிருந்து என்எஸ்ஜி விலக்கப்பட்டு சிஆர்பிஎப் பொறுப்பேற்க உள்ளது.

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த பாஜ தலைவர் எல்.கே. அத்வானி, ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், சட்டீஸ்கர் முன்னாள் முதல்வரான பாஜவின் ராமன் சிங், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டிபிஏபி) தலைவர் குலாம் நபி ஆசாத், தேசிய மாநாடு தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் அடுத்த மாதம் முதல் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) மூலம் பாதுகாக்கப்படுவார்கள்.

இதன் மூலம் விஐபி பாதுகாப்பிலிருந்து மொத்தம் 450 என்எஸ்ஜி படையினர் விலகுவார்கள். இப்படையினர் அயோத்தியில் ராமர் கோயில் அருகே உள்ள சில அதிக ஆபத்துள்ள பகுதிகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post விஐபி பாதுகாப்பு பணியிலிருந்து கறுப்பு பூனை படை முழுமையாக விலகல்: சிஆர்பிஎப் பொறுப்பேற்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article