அருப்புக்கோட்டை, ஜன.22: அருப்புக்கோட்டையில் டூவீலரில் வாளுடன் வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து வாள், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று முன்தினம் டவுன் எஸ்ஐ ஜோதிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விருதுநகர் மெயின் ரோட்டில் புளியம்பட்டி பகுதியில் டூவீலரில் வேகமாக இருவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சுழி அருகே மைலி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (30), அருப்புக்கோட்டை பாலையம்பட்டி மேலத்தெருவை சேர்ந்த சதீஸ்குமார் (25) என்பதும், சாக்குப்பையில் 2 அடி நீளமுள்ள வாள் மற்றும் 15 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக பாலமுருகனிடம் விசாரித்த போது, தனக்கு எதிரிகள் அதிகம் இருப்பதால் வாளுடன் சுற்றித்திரிவதாக தெரிவித்தார். இதையடுத்து பாலமுருகன், சதீஸ்குமாரை போலீசார் கைது செய்து வாள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
The post வாளுடன் வலம் வந்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.