
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர்(மாவட்டம்) தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் 33 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவரும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் இவர், தனது தாய் வீட்டுக்கு அடிக்கடி தனியார் பஸ்சில் சென்று வந்தார். அப்போது அந்த பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்த ஹனூர் தாலுகா இக்கடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வீரபத்ரசாமி என்பவருக்கும், இந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். ஒரு கட்டத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண், தனது கள்ளக்காதலன் வீரபத்ரசாமியை தன்னுடைய வீட்டுக்கே அழைத்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.
ஆனால் இதை அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீரபத்ரசாமி தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டை புதுப்பிக்கும் பணி நடந்தது. அப்போது அங்கு வேலைக்கு வந்த ஒரு வாலிபருக்கும், அந்த பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக சந்தேகப்பட்டு வீரபத்ரசாமி அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இதனால் வீரபத்ரசாமியிடம் இருந்து அந்த பெண் விலக தொடங்கினார். மேலும் தனது செல்போன் எண்ணையும் மாற்றினார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் புதிய செல்போன் எண்ணிற்கு வீரபத்ரசாமி தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது தன்னுடனான கள்ளத்தொடர்பை கைவிடக்கூடாது என்றும், இல்லையேல் நாம் இருவரும் இருக்கும் ஆபாச வீடியோவை உனது கணவர், குடும்பத்தினர், கிராம மக்கள் என அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என்றும் வீரபத்ரசாமி மிரட்டினார். இதனால் பயந்துபோன அந்த பெண் இதுபற்றி சாம்ராஜ்நகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இதுபற்றி அறிந்த வீரபத்ரசாமி, அந்த பெண்ணின் ஆபாச வீடியோவை அவரது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அனுப்பினார். இதையடுத்து போலீசார் வீரபத்ரசாமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கள்ளக்காதலின் சகவாசத்தால் பஸ் கண்டக்டர் வேலையும் போய் கடைசியில் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் வீரபத்ரசாமி. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.