வாரிசு அரசியலை பற்றி பேச பாஜவுக்கு அருகதையில்லை: செல்வபெருந்தகை பேட்டி

3 months ago 24

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இந்திரா தோழமை சக்தி இயக்க மாநில ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகை தலைமையில் நேற்று நடைபெற்றது. இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் லோகேஷ்குமார் தலைமை தாங்கினார். இந்திரா தோழமை சக்தி இயக்க மாநில ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி கார்த்திக், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுபத்திர தேவி, ஜெயந்தி, தமிழ்மணி, ஜமால் ஹருனிசா, ஸ்ரீதேவி, காங்கிரஸ் மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.காண்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:
ஊழல் வழக்கில் சிறை சென்று வந்த செந்தில்பாலாஜியை கொண்டாடுவது வெட்கக்கேடானது என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு அவரும் ஒரு நாள் சிறை செல்லலாம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானது குறித்து வாரிசு அரசியல் வாதத்தை முன்வைக்க பாஜவிற்கு தகுதியில்லை. ராஜ்நாத் சிங் மகன், அமித்ஷா மகன் என மொத்தம் 60 பாஜ தலைவர்களின் வாரிசுகள் எந்தெந்த பதவிகளில் இருக்கிறார்கள் என்று பட்டியல் வெளியிட முடியும். தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்.

The post வாரிசு அரசியலை பற்றி பேச பாஜவுக்கு அருகதையில்லை: செல்வபெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article