வாராந்திர குறைதீர்வு கூட்டத்தில் 486 பேர் கோரிக்கை மனு டிஆர்ஓ ராமபிரதீபன் பெற்று விசாரணை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்

1 month ago 5

திருவண்ணாமலை, நவ.19: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 486 பேர் கோரிக்கை மனு அளித்தனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள்கிழமையன்று நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ ராமபிரதீபன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா, மாவட்ட இளநிலை மறுவாழ்வு அலுவலர் சூர்யா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, சுய வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 486 பேர் மனு அளித்தனர்.

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஆர்ஓ உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக ஆய்வு செய்தார். மேலும், மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்களை, அவர்கள் காத்திருந்த இடத்துக்கு நேரில் சென்று டிஆர்ஓ பெற்றுக்கொண்டார். உதவி உபகரணங்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டார். மேலும், வழக்கம்போல கட்டணமின்றி பொதுமக்களுக்கு மனுக்கள் எழுதித்தரும் சிறப்பு மையம், குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழங்கும் மையம் ஆகியவை செயல்பட்டன. தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

The post வாராந்திர குறைதீர்வு கூட்டத்தில் 486 பேர் கோரிக்கை மனு டிஆர்ஓ ராமபிரதீபன் பெற்று விசாரணை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் appeared first on Dinakaran.

Read Entire Article