வாரம் 90 மணி நேரம் வேலை.. எல் அன்ட் டி நிறுவனத் தலைவரின் கருத்தால் கொதித்த எம்.பி., சு.வெங்கடேசன்!!

4 months ago 14

சென்னை: வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் அன்ட் டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார் என சு.வெங்கடேசன் எம்.பி., தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்;

எல் அன்ட் டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார்.

தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவிகித உயர்வு.

தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார்.

அலெக்ஜாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா?

சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான்.

தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா?

இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான்.

நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டுவரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post வாரம் 90 மணி நேரம் வேலை.. எல் அன்ட் டி நிறுவனத் தலைவரின் கருத்தால் கொதித்த எம்.பி., சு.வெங்கடேசன்!! appeared first on Dinakaran.

Read Entire Article