
புதுடெல்லி,
வாரணாசியில் கடந்த 2 ஆண்டுகளாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. வாரணாசிக்கும் - தமிழகத்துக்கும் பழைமை காலத்தில் இருந்துள்ள உறவை புதுப்பிக்கும் வகையில் இந்நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி நடத்த ஏற்பாடு செய்தார். தற்போது காசி தமிழ்ச் சங்கமம் (கேடிஎஸ்) 3.0 இன்று தொடங்குகிறது.
இந்நிலையில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் பல அரசிய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். வரும் 25ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியினரும் பங்கேற்கின்றனர்.