வார விடுமுறையையொட்டி சென்னை புத்தக கண்காட்சியில் குவிந்த வாசகர்கள்

4 months ago 11

சென்னை,

பபாசி நடத்தும் 48-வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், கடந்த டிசம்பர் 27-ந்தேதி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இங்கு சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, 10 சதவீதம் தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

புத்தக கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சி, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படிக்கக்கூடிய அனைத்து புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு என பல்வேறு வகையான புத்தகங்கள் புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த புத்தக கண்காட்சிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், இன்று வார விடுமுறையையொட்டி புத்தக கண்காட்சியில் வழக்கத்தை விட அதிக அளவில் வாசகர்கள் குவிந்தனர். வாசகர்களின் தேவைகளுக்காக உணவகங்கள், குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article