வார விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கம்

22 hours ago 3

சென்னை,

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு வரும் 4,5,6 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கு கூடுதலான பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுகு 4-ந்தேதி 245 பஸ்களும், 5-ந்தேதி 240 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு 4,5 ஆகிய தேதிகளில் தலா 51 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மாதவரத்தில் இருந்து 40 பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தங்களது பயணத்திற்கு www.tnstc.inஎன்ற இணையதளம் வாயிலாகவும், செல்போன் செயலியில் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article