
இந்தவார ராசிபலன்:-
மேஷம்
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த மேஷ ராசியினரை இந்த வாரம் பிரிந்த உறவுகள் நாடி வரும். குடும்ப செலவுக்கேற்ற தக்க பண வரவு உண்டு. குடும்பத்தில் குதூகலம் நிலவும்.
பால்பொருள் உற்பத்தி, ஓட்டல் தொழில் துறையினர், ரசாயன பொருள், வாகன வியாபாரிகள் தொழில் வெற்றி அடைவர். அரசு பதவிகளில் உள்ள உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புது வாய்ப்புகளை பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு, நிதி நிறுவன பங்குகளில் ஆதாயம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா செல்வர்.
தோலில் பாதிப்பு, மனக்குழப்பம், உடல் அசதி ஆகியவை ஏற்பட்டு விலகும். குலதெய்வம், இஷ்ட தெய்வ மந்திரங்கள், பாசுரங்களை வாய்விட்டு சொல்லி வருவது பல நன்மைகளை தரும்.
ரிஷபம்
பெருந்தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்ட ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்பத்தாருடன் சுற்றுலா செல்வீர்கள். குடும்ப பொருளாதார நிலை உயரும்.
மருத்துவ, ரசாயன தொழில் துறையினர், நகை, ஜவுளி வியாபாரிகள் தொழில் விருத்தி பெறுவர். தனியார் உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகத்தினரின் சட்டதிட்டங்கள் நிம்மதி அளிக்கும்.
ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஹோட்டல், எரிவாயு நிறுவன பங்குகளில் லாபம். அடைவர். ரியல் எஸ்டேட் பிரிவினருக்கு இது நல்ல காலம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு தேர்வு சம்பந்தமான தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக் கொள்வர்.
உடல அசதி, தலைவலி, ஜலதோஷம் ஆகியவை ஏற்பட்டு தகுந்த சிகிச்சை மூலம் விலகும். பானகம், நீர்மோர், குடிநீர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தானமாக வழங்குவது, அருகில் உள்ள கோவில் அபிஷேகத்திற்கு பால் தருவது பல நன்மைகளை ஏற்படுத்தும்.
மிதுனம்
எதிலும் புதுமையைப் புகுத்துவதில் வல்லமை படைத்த மிதுன ராசியினர் இந்த வாரம் சமூக காரியங்களில் ஈடுபட்டு பெயர் பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவி வழி உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
கட்டுமான பொருள், ஜவுளி, சிறு, குறு தொழில் துறையினர், விளைபொருள் வியாபாரிகள் புதிய ஆர்டர் கிடைத்து மகிழ்வர். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் வேறு ஊர்களில் கட்டுமானத் திட்டங்களை தொடங்குவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் அரசு நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளில் பங்கு பெறுவார்கள்.
வயிற்று வலி, பசியின்மை, தொண்டை பாதிப்பு ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டு சிகிச்சை மூலம் விலகும். வயதான பெண்மணிகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்வது, அருகில் உள்ள கோவிலுக்கு நெய் தானம் தருவது மூலம் பல சிக்கல்கள் விலக்கும்.
கடகம்
தொலைதூரச் சிந்தனையுடைய கடக ராசியினர் இந்த வாரம் புதிய நண்பர்களின் தொடர்புகளை பெறுவார்கள். எதிர்பாரா செலவு உண்டு. சமூக விவகாரங்களில் கவனம் தேவை.
ஜவுளி தொழில் துறையினர், சாலையோர கடை வியாபாரிகள் நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டும். தனியார் உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளால் ஆதாயம் பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்குவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வேளாண்மை, அரசு கட்டுமான நிறுவன பங்குகளில் லாபம் அடைவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேல்படிப்புக்கான ஆலோசனைகளை தேடிப்பெற வேண்டும்.
மனக்குழப்பம், ஜீரண கோளாறு, வயிற்று வலி ஆகியவை ஏற்பட்டு தகுந்த ஓய்வு எடுப்பதன் மூலம் விலகும். வயதான பெரியவருக்கு வயிறார அன்னமிட்டு பரிசு பொருள்கள் கொடுத்து, ஆசிகளை பெறுவதன் மூலம் நன்மைகள் வந்து சேரும்.
சிம்மம்
போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் சலனப்படாத சிம்ம ராசியினர் இந்த வாரம் எதிர்காலத்திற்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பொருளாதார நிலை உயரும். இல்லத்தரசிகளுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு.
மருந்து, இரும்பு தொழில் துறையினர், உணவகம், மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் நடையிடுவர். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல்கள் விலகி நன்மை பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் நடைபெற்று வரும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மசாலா பொருள் தயாரிப்பு, ஓட்டல் துறை நிறுவன பங்குகளில் லாபம் காணலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேறு ஊருக்கு சென்று தொழில்நுட்ப விஷயங்களை அறிந்து கொள்வார்கள்.
உடல் அசதி, மனக்குழப்பம், சளித்தொல்லை ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். அருகில் உள்ள கோவிலில் பிரசாதமாக புளியோதரை கொடுப்பதன் மூலமாகவும், இரவில் நாய்களுக்கு உணவிடுவதன் மூலமும் பல நன்மைகள் சேரும்.
கன்னி
எல்லோரிடமும் சமமாகப் பழகும் அன்புள்ளம் உள்ள கன்னி ராசியினர் இந்த வாரம் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு நிம்மதி பெறுவீர்கள். குடும்ப வருமானம் உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.
ஹெர்பல் பொருள் தயாரிப்பு தொழில் துறையினர், மளிகை, காய்கறி வியாபாரிகள் திட்டமிட்ட லாபம் பெறுவர். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக செயல்பட்டு முக்கியமான இடத்தை பிடிப்பர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்வர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் அரசு நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்று மகிழ்வர்.
மன உளைச்சல், தலைவலி, முட்டு வலி ஆகியவை ஏற்பட்டு விலகும். அம்மன் பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் தருவதன் மூலமும், அம்மனுக்கு வாசனை மிகுந்த மஞ்சள் நிற மலர் மாலை சமர்ப்பிப்பதாலும் பல நன்மைகள் ஏற்படும்.
துலாம்
உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் காரியங்களில் ஈடுபடும் துலாம் ராசியினருக்கு இந்த வாரம் உறவினர்களால் மனதில் உற்சாகம் ஏற்படும். குடும்ப பொருளாதாரம் மன நிம்மதி தரும். மனைவி வழி சொந்தங்களை அனுசரித்து செல்லவும்.
தடை தாமதங்களை சந்தித்து வந்த தொழில் துறையினர், வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் அடைவர். அரசு, தனியார் உத்தியோகஸ்தர்கள் பல நன்மைகளைப் பெற்று உற்சாகம் அடைவர்.
ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் பிரிவு முதலீட்டாளர்களுக்கு சிக்கல்கள் அகலும் காலகட்டம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பெறுவதற்கான வழிகாட்டுதல்களை தேடிப் பெற வேண்டும்.
தோலில் பாதிப்பு, மனக்குழப்பம் ஆகியவை ஏற்பட்டு தக்க சிகிச்சையால் அகலும். குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை பரிசாக அளிப்பதாலும், துப்புரவு தொழிலாளர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்குவதாலும் பல நன்மைகள் வந்து சேரும்.
விருச்சிகம்
விசாலமான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும் கொண்ட விருச்சிக ராசியினருக்கு, மனதில் புதிய நம்பிக்கைகள் உருவாகி உற்சாகம் ஏற்படும். குடும்ப பொருளாதார நிலை உயரும்.
சினிமா, மீடியா தொழில் துறையினர், கட்டுமான பொருள்கள் வியாபாரிகள் சிக்கல்களை வெற்றிகரமாக கடந்து செல்வர். அரசு துறை உத்தியோகஸ்தர்கள் விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்கப் பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலியம், எரிவாயு நிறுவன பங்குகளில் எதிர்பார்த்த லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால நலனுக்கான புது விஷயங்களை அறிந்து கொள்வர்.
தொண்டை வலி, காய்ச்சல், கை-கால் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். அருகில் உள்ள கோவில்களில் இயன்றவரை உழவார பணிகள் செய்வது, முதியோர்களுக்கு அன்னதானம், பொருள் தானம் செய்வதன் மூலம் நன்மைகள் உண்டு.
தனுசு
நியாயத்துக்காகப் போராடும் குணம் கொண்ட தனுசு ராசியினர் இந்த வாரம் பல நன்மைகளைப் பெறுவர். உற்றார் உறவினர்களால் ஆதாயம் உண்டு. எந்தச் சிக்கலையும் சமாளிக்கும் மனதிடம் ஏற்படும்.
ஓட்டல், ஆடை, ஆபரண தயாரிப்பு தொழில் துறையினர், ஏற்றுமதி-இறக்குமதி பொருள் வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் பெறுவர். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினர் கட்டுமான பணிகளை நேரில் பார்வை செய்யவும். ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு ஏற்றுமதி-இறக்குமதி, கப்பல் நிறுவன பங்குகளால் நன்மை ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மேற்படிப்பு குறித்த நல்ல ஆலோசனைகளை வழங்குவார்கள்.
மன அழுத்தம், அடிவயிறு, கால்கள் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு தகுந்த மருத்துவ சிகிச்சை மூலம் விலகும். உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நீர்மோர், தண்ணீர் ஆகியவற்றை தானமாக வழங்கினாலும், ஆதரவற்ற சிறுவர்களுக்கு இயன்றவரை உதவிகள் செய்வதாலும் பல நன்மைகள் உண்டு.
மகரம்
அனைவரையும் சமமாக மதிக்கும் குணம் கொண்ட மகர ராசியினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறும். செலவுகளை திறமையாகச் சமாளித்து, சேமித்தும் விடுவீர்கள்.
மருத்துவம், விவசாயம் ஆகிய தொழில் துறையினர், வாகனம், கட்டுமான பொருள் வியாபாரிகள் தொழில் விரிவாக்க பணிகளில் ஈடுபட்டு முன்னேறுவார்கள். அரசு துறை உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தின் மதிப்பை பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் நிதானமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளை பெற்ற மகிழ்வர்.
வயிற்று வலி, கால்வலி, காய்ச்சல், சளி ஆகியவை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும். பொது இடங்களில் நீர்மோர், குடிநீர் ஆகியவற்றை தானமாக வழங்குவதன் மூலமும், தாயார் சன்னதிகளில் இனிப்பு பிரசாதம் அளிப்பதாலும் பல சிக்கல்கள் விலகும்.
கும்பம்
கடின உழைப்பும், திட்டமிட்ட முன்னேற்றமும் கொண்ட கும்ப ராசியினர் இந்த வாரம் சமூக முக்கியத்துவம் பெற்ற மனிதர்களாக உலா வருவார்கள். குடும்ப பொருளாதார நிலையில் எதிர்பார்த்த தனவரவு உண்டு. சமூகத்தில் மதிப்பு உயரும்.
சுற்றுலா, பெட்ரோல் பங்க் தொழில் துறையினர், வேளாண் விளைபொருள், ஆடை-ஆபரண வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவர். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் தடைகளை சந்தித்து சாதனை புரிவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய முதலீடுகளை செய்யலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மருந்து பொருள் நிறுவனம், ரியல் எஸ்டேட் துறை ஆகிய பங்குகள் மூலம் ஆதாயம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை பெறுவார்கள்.
வாய்ப்புண், தொண்டை வலி, உடல் அசதி, காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டு ஓய்வு மற்றும் மருத்துவம் மூலம் குணமடையும். அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு திருநீறு அபிஷேகம் செய்வதும், அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்வதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.
மீனம்
அடிப்படை உரிமைகளை எந்நிலையிலும் விட்டுக் கொடுக்காத மீன ராசியினர் இவ்வாரம் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்ப பொருளாதார நிலையில் சிக்கல்கள் விலகி, எதிர்பார்த்த பொருள் கைகளுக்கு வந்து சேரும். கடன்கள் அடைபடும்.
மின் சாதன தயாரிப்பு தொழில்துறையினர், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள் திட்டமிட்ட நன்மைகளை பெறுவர். தனியார் மற்றும் அரசுத்துறை உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் தொடர்பால் நன்மை பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினருக்கு இது நல்ல காலம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலிய நிறுவனம், சுற்றுலா நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர்.
மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்கள் மருந்து மாத்திரைகளை கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றுப் பிரச்சனை ஏற்பட்டு தக்க மருத்துவ சிகிச்சையால் நீங்கும். வயது முதிர்ந்த பெரியவர்களின் ஆசிகளை பெறுவதும், பசு மாடுகளுக்கு வெண் பூசணி உண்ணக் கொடுப்பதும் பல சிக்கல்களை விலக்கும்.
