வார ராசிபலன் 06.10.2024 முதல் 12.10.2024 வரை

3 months ago 25

இந்த வாரராசிபலன்:

மேஷம்

முயற்சிகள் வெற்றி பெறும் வாரம் இது. தொழில்துறையினர் தங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற ஆதாயத்தை பெறுவார்கள். வியாபாரிகள் இந்தவாரம் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வர்த்தகத்தை பெருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். உடன் பணியாற்றுபவர்களோடு இணக்கமாக இருப்பது அவசியம். ரியல்எஸ்டேட் துறையினர் இந்தவாரம் புதிய திட்டங்களை தொடங்குவதை தவிர்க்கவும். ஷேர்மார்க்கெட் துறையினர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எரிவாயு ஆகிய பங்குகளில் லாபம் பெறலாம். கலைத்துறையினர் இந்தவாரம் புதுமையாக சிந்தித்து வெற்றி பெறுவார்கள். மீடியாவில் இருப்பவர்கள் தங்களுடைய திறமைக்கேற்ற அங்கீகாரத்தை பெறுவார்கள். இல்லத்தரசிகளை பொறுத்தவரை இது மகிழ்ச்சியான வாரம்.

ரிஷபம்

பேச்சில் நிதானத்தை கடைபிடித்து காரியம் வெற்றி அடைய வேண்டிய காலகட்டம் இது. தொழில்துறையினர் வழக்கத்தைவிட சற்று கூடுதலாக உழைக்க வேண்டும். வியாபாரிகள் ஊழியர்களுடைய நலனில் அக்கறைகாட்ட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். ரியல்எஸ்டேட் துறையினர் இந்தவாரம் புதிய திட்டங்களை தவிர்க்க வேண்டும். ஷேர்மார்க்கெட் துறையினர் இந்த வாரம் புதிய முதலீடுகளை செய்யக்கூடாது. கலைத்துறையில் இருப்பவர்கள் பல்வேறு இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டு தங்களுடைய பணிகளை செய்வர். மீடியாவில் இருப்பவர்கள் புதிய சிந்தனைகளால் பாராட்டு பெறுவார்கள். இல்லத்தரசிகளுக்கு இது இனியவாரம்.

மிதுனம்

மகிழ்ச்சியான வாரம் இது. தொழில்துறையினர் முயற்சிகளுக்கு ஏற்ற லாபத்தை பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் வர்த்தகத்தை பெருக்க கூடுதல் விளம்பரங்களை செய்ய வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்தவாரம் வேலைப்பளு காரணமாக மனஅழுத்தம் அடைவார்கள். ரியல்எஸ்டேட் துறையினர் புதிய ப்ராஜெக்ட்களை இந்தவாரம் தொடங்கலாம். ஷேர்மார்க்கெட் துறையினர் ஆட்டோமொபைல் மற்றும் எந்திரதளவாட பங்குகள் மூலம் ஆதாயம் அடைவார்கள். மீடியாவில் இருப்பவர்கள் புதியவாய்ப்புகளைப் பெற்று திறமைகளை வெளிப்படுத்துவார்கள். கலைத்துறையில் உள்ளவர்கள் சாதனை புரியும் வாரம் இது. சுபநிகழ்ச்சிகளின் கலந்து கொண்டு இல்லத்தரசிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்தவாரம் திங்கள் மற்றும் செவ்வாய்ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.

கடகம்

மனதில் பல்வேறு எண்ணங்களால் குழப்பங்கள் ஏற்பட்டு தெளிவாகும் வாரம் இது. தொழில்துறையில் இருப்பவர்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவார்கள். வியாபாரிகள் கடந்த காலங்களில் இருந்த தடை தாமதங்கள் அகன்று மனநிம்மதி அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவார்கள். ரியல்எஸ்டேட் துறையினருக்கு இது லாபகரமான காலகட்டம். ஷேர்மார்க்கெட் துறையினர் ரியல்எஸ்டேட் மற்றும் வங்கிகள் சம்பந்தமான பங்குகளில் ஆதாயம் அடைவார்கள். மீடியாவில் இருப்பவர்கள் பல இடங்களுக்கும் பயணம் செய்வார்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் எதிர்பாராத புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். இல்லத்தரசிகளுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.

சிம்மம்

எதிர்பார்த்த பணவரவு கைகளுக்கு வந்து சேரும் காலகட்டம் இது. தொழில்துறையினருக்கு படிப்படியான வளர்ச்சிகள் ஏற்படும். வியாபாரிகள் புதிய முதலீடுகளை செய்வதை சில வாரங்கள் தள்ளிவைக்க வேண்டும்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகங்களில் தங்களுடைய பணி சம்பந்தமாக மட்டுமே மற்றவர்களுடன் பேச வேண்டும். ரியல்எஸ்டேட் துறையினர் திட்டமிட்ட லாபத்தை அடைவார்கள். ஷேர்மார்க்கெட் துறையினர் அழகுசாதனபொருட்கள் மற்றும் ஆட்டோமொபைல் சார்ந்த பங்குகள் மூலம் ஆதாயம் பெறுவார்கள். மீடியாவில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். கலைத்துறையினர் நேரடி போட்டிகளை சந்திப்பார்கள். இல்லத்தரசிகள் பல்வேறு குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டு பிஸியாக இருப்பார்கள். புதன் மற்றும் வியாழன்ஆகிய நாட்களில் இரவு பயணங்களை தவிர்க்க வேண்டும்.

கன்னி

பல்வேறு காரியத்தடைகளை சந்திக்க வேண்டிய காலகட்டம் இது. வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைய நேரம்காலம் பாராமல் உழைக்க வேண்டும். தொழில்துறையினர் எந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது காரணமாக செலவினங்களை சந்திப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தின் ஆதரவை பெற்று தங்களுடைய பணிகளை திறம்பட மேற்கொள்வார்கள். ரியல்எஸ்டேட் துறையினர் புதியதிட்டங்களை தொடங்குவதற்கான முயற்சிகளை செய்யலாம். ஷேர் மார்க்கெட்துறையினர் திரவப்பொருட்கள் மற்றும் புட்இண்டஸ்ட்ரி பங்குகள் மூலம் ஆதாயம் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த நன்மைகள் வந்து சேரும். மீடியாவில் இருப்பவர்கள் புதியதிட்டங்களை செயல்படுத்தி பெயர் வாங்குவார்கள். இல்லத்தரசிகளுக்கு இது மனமகிழ்ச்சியை அளிக்கும் காலகட்டம்.

துலாம்

தெளிவான சிந்தனைகள் மனதில் உருவாகும் காலகட்டம் இது. வியாபாரிகள் புதிய முதலீடுகளை இந்தவாரம் தவிர்க்க வேண்டும். தொழில்துறையினர் வழக்கத்தைவிடவும் கவனமாக செயல்படவேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணிஇடத்தில் கவனமாக செயல்படாவிட்டால் நடவடிக்கைகளுக்கு உட்படுவார்கள். ரியல்எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள். ஷேர்மார்க்கெட் துறையினர் எரிபொருள் மற்றும் எந்திரதளவாடங்கள் சம்பந்தப்பட்ட பங்குகள் மூலம் ஆதாயம் அடைவார்கள். கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு புதியவாய்ப்புகளை பெறுவார்கள். மீடியாவில் இருப்பவர்கள் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்வார்கள். இல்லத்தரசிகளுக்கு ஆடை ஆபரணங்கள் சேரும் வாரம்.

விருச்சிகம்

உடல் நலனில் வழக்கத்தைவிட கவனம் செலுத்த வேண்டியவாரம் இது. தொழில்துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவதற்கு கடினமாக உழைக்கவேண்டும். வியாபாரிகள் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கவனமாக கையாள வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பலநாட்களாக எதிர்பார்த்த நல்ல விஷயங்களை நடக்க காண்பார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் இந்தவாரம் புதிய திட்டங்களை தள்ளிவைக்க வேண்டும். ஷேர்மார்க்கெட் துறையினர் எந்திரங்கள் மற்றும் உணவுப்பொருள்சார்ந்த பங்குகள் மூலம் ஆதாயம் அடைவார்கள். மீடியாவில் இருப்பவர்கள் உழைப்புக்கேற்ற ஆதாயம் அடைவார்கள். கலைத்துறையினர் வெளிமாநிலம், வெளிநாடு பயணங்களை மேற்கொள்வார்கள். இல்லத்தரசிகள் பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உற்சாகமாக இருப்பார்கள்.

தனுசு

மனதில் நிம்மதி நிலவக்கூடிய காலகட்டம் இது. தொழில்துறையினருக்கு அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரிகள் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். ரியல்எஸ்டேட் துறையினர் கூடுதல் விளம்பரங்களை செய்து வியாபாரத்தை அதிகரிக்க வேண்டும். ஷேர்மார்க்கெட் துறையினர் நிலக்கரிசார்ந்த பங்குகளில் ஆதாயம் அடைவார்கள். கலைத்துறையினர் புதியவாய்ப்புகளைப்பெற்று மகிழ்ச்சியடைவர்.மீடியா துறையினர் திறமைகளுக்கு ஏற்ற சந்தர்ப்பங்களை பெற்று தங்களை நிரூபணம் செய்வார்கள். பெண்மணிகள் மனதில் இந்தவாரம் ஒருவித நிம்மதி ஏற்படும்.

மகரம்

பொருளாதார நிலையில் இருந்த சுணக்கநிலை அகன்று சுமுகமான நிலை உருவாகும். தொழில்துறையினர் புதிய திட்டங்களை மேற்கொண்டு லாபங்களை அடைவார்கள்.வியாபாரிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல மாற்றங்களை செய்வதற்கான காலம் அமைந்துள்ளது. உத்தியோகஸ்தர்கள் தகவல் பரிமாற்றங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ரியல்எஸ்டேட் துறையினர் இந்தவாரம் படிப்படியான முன்னேற்றத்தை அடைவார்கள். ஷேர்மார்க்கெட் துறையினர் கம்ப்யூட்டர் மற்றும் அரசு சார்ந்த பங்குகளில் ஆதாயம் பெறுவார்கள். கலைத்துறையினர் கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது. மீடியாவில் இருப்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் கெட்டியாக பிடித்து முன்னேற வேண்டும். இல்லத்தரசிகளுக்கு வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்வது, புதன், வியாழன் ஆகிய நாட்களில் இரவு பயணங்கள் செய்வது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.

கும்பம்

நீண்ட நாட்கள் கழித்து பல நல்லவிஷயங்களை சந்திக்கும் காலகட்டம் இது. வியாபாரிகள் எதிர்பார்த்துவந்த ஆதாயத்தை அடைவார்கள். தொழில்துறையினர்தங்களுடைய உற்பத்தியை பெருக்கி நல்ல லாபம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் இந்தவாரம் தங்களுடைய பணிகளில் மட்டுமே கவனம் செலுத்திவருவது நல்லது. ரியல்எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை அடைவதில் சற்று காலதாமதம் ஏற்படும்.ஷேர்மார்க்கெட் துறையினர் பொறியியல் மற்றும் வாகன தயாரிப்பு ஆகிய பங்குகளில் ஆதாயம் அடைவார்கள். கலைத்துறையினர் திடீர் வாய்ப்புகளைப்பெற்று இன்ப அதிர்ச்சி அடைவார்கள். மீடியாவில் இருப்பவர்கள் பணியிடத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவார்கள். இல்லத்தரசிகளை பொறுத்தவரை நிம்மதி நிலவும் வாரம் இது.

மீனம்

எதிர்பாராத நபர்கள் சரியான சமயத்தில் உதவி செய்து ஆச்சரியப்படுத்தும் வாரம் இது. தொழில் துறையினருக்கு இது லாபகரமான காலகட்டம். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவதற்கு கண்ணும் கருத்துமாக உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருந்து செயல்படவேண்டிய காலகட்டம். ரியல்எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் முதலீடுகளை செய்யலாம். ஷேர்மார்க்கெட் துறையினர் உணவுப்பொருட்கள் சார்ந்த பங்குகள் மூலம் ஆதாயம் அடைவார்கள். கலைத்துறையினர் மறைமுக எதிர்ப்புகளோடுதங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டியதாக இருக்கும். மீடியாவில் இருப்பவர்கள் நேரம் காலம்பார்க்காமல் பணியாற்றவேண்டும். இல்லத்தரசிகளின் நீண்டநாள் விருப்பம் ஒன்று இந்தவாரம் நிறைவேறும்.

Read Entire Article