
மும்பை,
வார இறுதி நாளான இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை சென்செக்ஸ், 74,201.77 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 12.10 மணியளவில், சென்செக்ஸ் 1,065.10 புள்ளிகள் குறைந்து 73,547.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 323.00 புள்ளிகள் குறைந்து 22,222.05 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
பெரும்பாலாக அனைத்துத் துறைகளும் இன்று கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. ஐடி, ஆட்டோ மொபைல், மீடியா, டெலிகாம், பங்குகள் 2 முதல் 4 சதவீதம் சரிந்தன.
மும்பை பங்குச்சந்தை நடுத்தர, குறு நிறுவனங்களின் பங்குகள் தலா 2 சதவீதம் சரிந்தன, பாலிகேப் இந்தியா, கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி வங்கி, பிஎஸ்இ லிமிடெட், டிசிஎஸ் ஆகிய ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. இதுவரை சுமார் 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.