வார இறுதியில் கடும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை

2 months ago 15

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் திங்கட்கிழமை சரிவில் தொடங்கி 4 நாட்கள் தொடர்ச்சியாக சரிவில் இருந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை சரிந்து, முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி வர்த்தக இறுதியில் பிஎஸ்இ சென்செக்ஸ் 662.87 புள்ளிகள் குறைந்து 79,402.29 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டி 218.60 புள்ளிகள் குறைந்து 24,180.80 என்ற புள்ளிகளில் முடிவடைந்துள்ளது. மேலும், பேங்க் நிப்டி 743.70 புள்ளிகள் குறைந்து 50,787.45 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, லார்சன் அண்ட் டூப்ரோ, என்டிபிசி, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், மாருதி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் டைட்டன் ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. இதற்கு மாறாக, ஆக்சிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன் பார்மா மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அதிக லாபத்துடன் கைமாறின.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 5,062.45 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அதே சமயம் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (டிஐஐக்கள்) ரூ. 3,620.47 கோடி பங்குகளை வாங்கியதாக பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆசிய சந்தைகளில், சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்வுடன் நிலைபெற்றன, அதே சமயம் டோக்கியோ பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று உயர்வுடன் முடிவடைந்தன.

Read Entire Article