வேதாரண்யம், டிச.2: வேதாரண்யம் தாலுகா வாய்மேடு கடைத்தெருவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. இதனைசரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரியிலிருந்து அண்ணா பேட்டை, வாய்மேடு,தகட்டூர் ,மருதூர், ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யம் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடி நீர் திட்ட பிரதான குழாயில் வாய் மேட்டில் முள்ளியாற்றின் மேல் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நூற்றுக்கணக்கான லிட்டர் ஆற்றில் வீணாக செல்கிறது. இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் மூலமாகவும், போன் மூலம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யுமாறு அப்பகுதி பொதுமக்கள் ,வர்த்தகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வாய்மேடு கடைத்தெருவில் கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு appeared first on Dinakaran.