சென்னை: நாளை அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தொகுதி மறு வரையறை தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தொகுதி மறு வரைவு தொடர்பாக ஒன்றிய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ள நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கூட்டியுள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சிக்கு 2 பேர் வீதம் மொத்தம் 100க்கு மேற்பட்டவர்கள் கட்சி பிரதிநிதிகளை சார்ந்தவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இத்தகைய ஏற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அனைத்து கட்சி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் இருக்கைகள் எங்கே போடப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தொடர்பான ஆய்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்து வருகிறார். சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஏற்பாடுகளை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
The post நாளை அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!! appeared first on Dinakaran.