வானிலை முன்னெச்சரிக்கையை அறிய TN-Alert செயலி: தமிழக அரசு வெளியிட்டது

3 months ago 21

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 30ம் தேதி வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடத்திய ஆய்வு கூட்டத்தின்போது பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் செயலி அரசால் உருவாக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இதை தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று TN-Alert என்னும் கைப்பேசி செயலியை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வெளியிட்டார்.

இந்த செயலி, பொதுமக்கள் எளிய முறையில் இயக்கக் கூடிய வானிலை செயலியாக உள்ளது. இதன் மூலம் தம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்துகொள்ளலாம். செயலியில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியான தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா போன்ற தகவல்களை அறியலாம். TN-Alert செயலியை, Google Play Store மற்றும் IOS App Store-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.

The post வானிலை முன்னெச்சரிக்கையை அறிய TN-Alert செயலி: தமிழக அரசு வெளியிட்டது appeared first on Dinakaran.

Read Entire Article