சென்னை: வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் புயல் கண்காணிப்புக்கு 2 புதிய ரேடார்கள் நிறுவப்பட உள்ளன என பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது. உள்மாவட்டங்களுக்கென ஏற்காட்டிலும் தென் மாவட்டங்களுக்கென ராமநாதபுரத்திலும் ரேடார் நிறுவப்படும். ரூ.56 கோடி மதிப்பில் 2 சி பேண்டு டாப்ளர் ரேடார்கள் நிறுவப்பட உள்ளன என தெரிவித்தது.
The post வானிலை முன்னெச்சரிக்கை 2 புதிய ரேடார்கள் நிறுவப்பட உள்ளன: பேரிடர் மேலாண்மைத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.