வானிலை முன்னறிவிப்பு: நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை ‘ரெட் அலர்ட்’

2 hours ago 1

சென்னை: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு, சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை (செவ்வாய்க்கிழமை) ‘ரெட் அலர்ட் ’ விடுத்துள்ளது. மேலும், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நேற்று (நவ.24) காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.25) காலை 8.30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

Read Entire Article