கர்நாடகா, பெங்களூரிலுள்ள சர் சி.வி.ராமன் வானியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இன்ஜினியர் டிரெய்னி பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இன்ஜினியர் டிரெய்னி: 13 இடங்கள்.
வயது: 28க்குள். சம்பளம்: ரூ.31,000.
தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் 70% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு பெங்களூரிலுள்ள ராமன் ஆராய்ச்சி நிறுனத்தில் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் பணி வழங்கப்படும்.
http://rhino.rri.res.in/forms/trainee-eng-2025.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு [email protected] என்ற இ.மெயிலை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.05.2025.
The post வானியல் ஆராய்ச்சி மையத்தில் இன்ஜினியர் டிரெய்னி appeared first on Dinakaran.