வெற்றிலை மருத்துவ குணங்கள்
நன்றி குங்குமம் தோழி
*கொடி வகைகளைச் சேர்ந்த இது வெப்பமான இடங்களிலும், சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் சி அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன் நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்கள், குடல் புண்கள், உடல் இறுக்கத்தை குணப்படுத்துகிறது.
*வெற்றிலை நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. செரிமானத்தை தூண்டி, வாய் நாற்றத்தையும் போக்கும்.
*வெற்றிலையை மெல்லுவதினால் ஈறுகளில் உள்ள வலி, ரத்தக்கசிவு நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும்.
*வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித் தள்ளும் தன்மை கொண்டது.
*நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுக்கும். படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வர ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
*வெற்றிலைச் சாறுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் சளி, இருமல் போன்றவை குணமாகும்.
தொகுப்பு: எம்.வசந்தா, சென்னை.
The post வாசகர் பகுதி – வெற்றிலை மருத்துவ குணங்கள் appeared first on Dinakaran.