வாக்குச்சாவடி அளவில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்காவிட்டால் நடவடிக்கை: இபிஎஸ் எச்சரிக்கை

5 days ago 3

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி அளவில் பூத் கமிட்டி நிர்வாகிகளை மார்ச் மாதத்துக்குள் நியமிக்காவிட்டால் மாவட்ட செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுச்செயலாளர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்கு தயாராவது குறித்த ஆலோசனைக் கூட்டம், அதிமுக சார்பில் முதன்முறையாக காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Read Entire Article