சென்னை: எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஆதிதிராவிடர், பழங்குடி இன மக்களுக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்றும், வாக்கு அரசியலுக்கு வாய்பிளக்க வேண்டாம் என்று திமுக எம்எல்ஏ பரந்தாமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக சட்டத்துறை இணை செயலாளர் இ.பரந்தாமன் எம்எல்ஏ தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர் இன்று தோள்தட்டி குரல்கொடுப்பது வேடிக்கையாக உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களின் நலனுக்காக கொண்டுவந்து நிறைவேற்றப்படும் எல்லா திட்டங்கள் நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் முழுமையாக அம்மக்களிடம் சென்றடையும் வகையில் கண்காணிக்க தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ேமம்பாட்டு செயாலக்க திட்டம் 2023 என்னும் ஒரு சிறப்புச்சட்டம் கொண்டு வந்து தமிழ்நாடு அளவில் ஒரு குழு மற்றும் மாவட்ட அளவில் ஒரு குழு என சட்டப்படி அமைத்து இதில் தன்னார்வலர்களையும் இணைத்து திட்டங்களை கண்காணித்து வரும் நடவடிக்கை ஒன்றே இந்த ஆட்சியின் உச்சபட்ச நடவடிக்கை என்பதை பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில விழிப்புணர்வுக் கூட்டத்தை தனது ஆட்சியில் கூட்டாத பழனிசாமி திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 6 மாதத்திற்கு ஒருமுறை நடத்தும் எங்களை பார்த்து விரல் நீட்டும் உரிமை கொஞ்சமும் பழனிசாமிக்கு இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வாக்கு அரசியலுக்கு வாய்பிளக்காதீர்.! நீங்கள் வழுக்கிவிழுந்து பல காலமானது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post வாக்கு அரசியலுக்கு வாய்பிளக்க வேண்டாம்; ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை: எடப்பாடிக்கு திமுக எம்எல்ஏ கடும் கண்டனம் appeared first on Dinakaran.