சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 29.10.2024 முதல் 06.01.2025 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இன்று (29ம் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின், ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்திய தேர்தல் ஆணையத்தால், 09.11.2023, 10.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கிடையில், தமிழக அரசால், 09.11.2024 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம், சிறப்பு முகாம் தேதிகளை 09.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 10.11.2024 (ஞாயிற்றுக்கிழமை)க்கு பதிலாக, 16.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய
தேதிகளாக மாற்றி அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post வாக்காளர் வரைவு பட்டியல் இன்று வெளியீடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் 16, 17ம் தேதிக்கு மாற்றம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு appeared first on Dinakaran.