வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

6 months ago 20

 

தர்மபுரி, நவ.17: இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வாக்குபதிவு மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை, தாசில்தார் சண்முகம் பார்வையிட்டார்.

முகாமில் செந்தில் நகர், கருவூல காலனி, இலக்கியம்பட்டி, அழகாபுரி பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் மாற்றம், திருத்தம் ஆகிய பணிகளை செய்து கொண்டனர். புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை இணைக்கும் படிவங்களை அதிகாரிகளிடம் வழங்கினர். இதில் திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் கௌதம் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article