திருவள்ளூர்: மணலி அருகே கிரேனில் மோதி காவலர் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.25 நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் லட்சுமணன் (36). இவர் எண்ணூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் காவலர்களுக்கான அணிவகுப்புப் பயிற்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக லட்சுமணன் பைக்கில் வீட்டில்இருந்து புறப்பட்டுச் சென்றார். வழியில் மணலி சிபிசிஎல் நிறுவனம் அருகே செல்லும்போது குண்டும், குழியுமாக இருந்த சாலையில் நிலை தடுமாறி சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.