வள்ளுவரை யாரும் கபளீகரம் செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

4 hours ago 1

சிவகங்கை: வள்ளுவரை யாரும் கபளீகரம் செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே முயற்சி செய்கிறது. நூலகங்களை அதிகளவில் உருவாக்க வேண்டும். 2 லட்சத்து 75 ஆயிரம் புத்தகங்கள் எனக்கு அன்பளிப்பாக கிடைத்துள்ளன. வளர் தமிழ் நூலகத்துக்கு 1000 புத்தகங்களை அனுப்பி வைக்க உள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். உயர்கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. நான் முதல்வன் திட்டம் மூலமாக 22.56 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்துள்ளோம். புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக அளவிலான அரசு பல்கலைக்கழகங்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

கல்வி மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்குவது மாநில அரசு. வேந்தர் பதவி மட்டும் ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஒருவருக்கா என்பதுதான் எனது கேள்வி. மாநில கல்வி உரிமையை மீட்கும் பணியில் சட்டப்போராட்டமும் அரசியல் போராட்டங்களும் தொடரும் என்று காரைக்குடி அழகப்ப பல்கலையில் வளர் தமிழ் நூலகம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

 

The post வள்ளுவரை யாரும் கபளீகரம் செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Read Entire Article