வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.66 கோடி நிதி வழங்கிய அமைச்சர்கள்

3 months ago 21

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (07.10.2024) சென்னை, தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்களும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்களும் சென்னைப் பெருநகரப் பகுதியில் உள்ள ஊராட்சிகளின் தெருக்கள் மற்றும் சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு, ரூபாய் 66 கோடி நிதிக்கான காசோலையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு வழங்கினர்.

இவ்வகையில், சென்னைப் பெருநகரப் பகுதியில் உள்ள ஊராட்சிகளில் தெருக்கள் மற்றும் சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு, வளர்ச்சிக் கட்டணம் மற்றும் திறந்தவெளி இட ஒதுக்கீட்டுக் கட்டணங்களில் ரூபாய் 66 கோடி நிதி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயாலளர் ககன்தீப் சிங் பேடி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா, சி.எம்.டி.ஏ. முதன்மைச் செயல் அலுவலர் அ.சிவஞானம், தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.66 கோடி நிதி வழங்கிய அமைச்சர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article