'வளர்ச்சி, தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதே பட்ஜெட்டின் நோக்கம்' - நிர்மலா சீதாராமன்

3 hours ago 2

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மிகவும் சவாலான காலகட்டத்தில் மத்திய பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது;-

"வளர்ச்சி, உள்ளார்ந்த பாதுகாப்பு மற்றும் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவித்தல் ஆகியவையே 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் இலக்குகள் ஆகும். மிகவும் சவாலான காலகட்டத்தில் மத்திய பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது.

எதிர்கால போக்குகள் எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்ளக்கூடிய மாதிரிகள் எதுவும் இல்லை. இருப்பினும் இந்தியாவின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து, மதிப்பீடுகளை முடிந்தவரை துல்லியமாக வைத்திருக்க அரசாங்கம் முயற்சித்துள்ளது.துறை ரீதியான ஒதுக்கீடுகளை பட்ஜெட் குறைக்கவில்லை. அடுத்த நிதியாண்டில் பயனுள்ள மூலதனச் செலவு ரூ.19.08 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) மதிப்பீடுகள் மூலம், இந்தியாவின் பொருளாதாரம் ரியல் ட்ரேம் (Real term  ) அடிப்படையில் 6.4 சதவீதமும், நார்மினல் ட்ரேம் Nominal term  )அடிப்படையில் 9.7 சதவீதமும் வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தின்போது அரசாங்கம் பொருளாதாரத்தை மிகச்சிறப்பாக வழிநடத்தியது, மேலும் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

Read Entire Article