வளரசவாக்கம் மண்டலத்தில் கழிவுநீர் உந்து நிலையங்கள் 28ம் தேதி செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்

3 weeks ago 4

சென்னை: கோடம்பாக்கத்தில் பைப்லைன் இணைப்பு பணி நடைபெற உள்ளதால், வளரசவாக்கம் மண்டலத்தில் கழிவுநீர் உந்து நிலையங்கள் வரும் 28ம் தேதி செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பணிக்காக, 10வது மண்டலத்திற்கு உட்பட்ட கோயம்பேடு காளியம்மன் கோயில் தெருவில், (ஐயப்பன் நகர் 1வது தெரு சந்திப்பில்) கழிவுநீர் உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இப்பணி வரும் 28ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி 24 மாலை 8 மணி வரை என 38 மணி நேரம் நடைபெற உள்ளது. இதனால், வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட கங்கா நகர் கழிவுநீர் உந்து நிலையம், பல்லவன் நகர் கழிவுநீர் உந்து நிலையம், பலராம் நகர் கழிவுநீர் உந்து நிலையம், கணபதி நகர் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் சிஎம்டிஏ கழிவுநீர் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது.

எனவே, வளசரவாக்கம் மண்டல பகுதிகளுக்கு உட்பட்ட தெருக்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு அந்தந்த பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வளசரவாக்கம் வார்டு எண் 144க்கு பகுதி பொறியாளரை 8144930911, உதவி பொறியாளரை 8144930144 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். வார்டு எண் 146க்கு பகுதி பொறியாளரை 8144930911, உதவி பொறியாளரை 8144930146 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். வார்டு எண்.147க்கு பகுதி பொறியாளரை 8144930911, உதவி பொறியாளரை 8144930147 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வளரசவாக்கம் மண்டலத்தில் கழிவுநீர் உந்து நிலையங்கள் 28ம் தேதி செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article