'வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது' - நிதின் கட்கரி

1 day ago 4

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இஸ்ரேல், ஈரான் மற்றும் ரஷியா, உக்ரைனுக்கும் இடையேயான மோதல்கள் காரணமாக உலகம் முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் உலகப் போர் நிகழும் வாய்ப்பு உள்ளது. ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் போரின் பரிமாணங்கள் மாறிவிட்டன.

இவை அனைத்திற்கும் மத்தியில், மனிதகுலத்தைப் பாதுகாப்பது கடினமாகிவிட்டது. பெரும்பாலும், பொதுமக்கள் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன. இது ஒரு கடுமையான சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்த பிரச்சினைகள் அனைத்தையும் உலக அளவில் விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இவை அனைத்தும் மெதுவாக அழிவுக்கு இட்டுச் செல்கின்றன. வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அன்பு ஆகியவை மறைத்து வருகின்றன."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Read Entire Article