வலுவை இழந்துவிட்டதால் தான் கூட்டணி ஆட்சிக்கு சம்மதித்ததா அதிமுக? - நயினார் நாகேந்திரன் பளிச் பதில்

1 day ago 2

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக பாஜக தலைவராக வந்திருக்கிறார் பாஜக சட்டமன்றக் கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன். வந்ததுமே முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு காலணி வாங்கித் தந்து அணியவைத்து அவரது சபதத்தை தற்காலிகமாக முடித்துவைத்திருக்கிறார்.

ஒருவிதமான அதிருப்தியில் இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கியை தங்கள் பக்கம் ஈர்க்கவே, கட்சி விதிகளை எல்லாம் தளர்த்தி நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக்கி இருக்கிறது பாஜக தலைமை என்று சொல்லப்படும் நிலையில், தலைவரான பிறகு ‘இந்து தமிழ் திசை’க்கு பிரத்யேக பேட்டியளித்தார் நாகேந்திரன். மிகவும் கவனமாகவே கேள்விகளை எதிர்கொண்டவர், சிக்கலான சில கேள்விகளை தனக்கே உரிய அரசியல் முதிர்ச்சியுடன் நாசூக்காக தவிர்த்துவிட்டே பேசினார். இனி, அவரது பேட்டி...

Read Entire Article