வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

5 hours ago 2


சென்னை: கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். புதிய சட்டத் திருத்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;

*கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. பிணையில் வெளிவர முடியாது.

*வலுக்கட்டாய கடன் வசூலால், கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடனை வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்.

*கடன் பெற்றவரையோ அவரது குடும்பத்தினரையோ நிறுவனங்கள் மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது.

* கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்.

கடன் வழங்கும் நிறுவனங்கள் அதனை வசூலிக்க முறையற்ற வழியை நாடுகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் இம்மசோதா கொண்டுவரப்பட்டதாக துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

The post வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Read Entire Article