வலங்கைமான்: வலங்கைமான் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றியம் 24 ஆவது ஒன்றிய மாநாடு ஆலங்குடியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு இளங்கோவன், சந்திரோதயம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் தம்புசாமி துவக்க உரையாற்றினார்,
ஒன்றிய செயலாளர் இராதா வேலை அறிக்கை வாசித்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள் வாழ்த்துரை வழங்கினார். ஒன்பது பேர் கொண்ட ஒன்றியகுழு உறுப்பினரில் புதிய ஒன்றிய செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். புதிய நிர்வாகிகளை அறிவித்து சிபிஎம் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் நிறைவுறையாற்றினார்.
ஒன்றிய மாநாட்டில் வேளாண் விரோத சட்டங்களால் வஞ்சிக்கப்படும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். மக்களை அச்சுறுத்தும் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய 4 சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், ஈரப்பதத்துடன் வரும் நெல்லை உளர்த்தும் ஆலை அமைக்க வேண்டும், வலங்கைமான் வட்டார மருத்துவமனையில் 24 மணிநேர மருத்துவர்களை பணியில் இருக்கும் வகையில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post வலங்கைமான் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் appeared first on Dinakaran.