டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் வர்த்தகத்தை முன்னிறுத்தி அமெரிக்கா பேசவில்லை என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. ராணுவ நடவடிக்கைகள் குறித்து மட்டுமே அமெரிக்காவுடன் பலகட்ட பேச்சு நடந்தது. காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியாவின் ஆயுத பலத்தால் பாக். துப்பாக்கிச்சூட்டை நிறுத்த வேண்டிய நிர்பந்தம். காஷ்மீர் விவகாரத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தை மட்டுமே இந்தியாவின் நிலைப்பாடு. காஷ்மீர் விவகாரத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தை என்ற கொள்கையில் எந்த சமரசமும் இல்லை. சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகளை பாக். விடுவிப்பதே தீர்வாகும் என்றும் கூறியுள்ளது.
The post வர்த்தகத்தை முன்னிறுத்தி அமெரிக்கா பேசவில்லை: வெளியுறவுத் துறை appeared first on Dinakaran.