வர்த்தக தடையை மீறி பாகிஸ்தான் செல்லும் இந்திய பொருட்கள்

13 hours ago 2

சென்னை,

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தக உறவை இந்தியா துண்டித்தது.

இருப்பினும் துபாய், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்கள், வர்த்தக தடையை மீறி, அங்கிருந்து பாகிஸ்தானுக்கு செல்வதாக உலக வர்த்தக ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

மேற்கண்ட 3-ம் நாடுகளுக்கு செல்லும் இந்திய பொருட்கள், வரியின்றி பொருட்களை வைக்க பயன்படும் சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்படுகின்றன. அங்கு இந்திய லேபிள்களை மறைத்து, 'துபாய் தயாரிப்பு' என்பது போன்ற போலி லேபிள் ஒட்டப்பட்டு, துபாய் தயாரிப்பு என்ற போர்வையில் அதிக விலையுடன் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்திய பொருட்களுக்கு பாகிஸ்தானில் அதிக கிராக்கி இருப்பதே இதற்கு காரணம்.

Read Entire Article