சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நாகப்பட்டினம் எம்எல்ஏ முகம்மது ஷாநவாஸ்(விசிக)எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: கடந்தஆட்சிக் காலத்தில் ஓடிய பேருந்துகள், கயிறு வைத்து கட்டப்பட்டு ஓடிய அந்தப் போட்டோடக்களை எல்லாம் இப்போது எடுத்து டிரெண்ட் செய்வதை சில ஐடி விங்குகள் செய்து வருகிறார்கள். புதிய பேருந்து வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இதுவரை 3004 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் வழங்கப்பட உள்ள எலெக்ட்ரிக் பஸ்கள் 500 வர இருக்கிறது.
இதுவுமில்லாமல் எம்டிசி டெண்டர் விடப்பட்டு, வருகின்ற மார்ச் மாதம் 500 எலெக்ட்ரிக் பஸ்கள் வருகிறது. அதுவுமில்லாமல் இன்னும் 500 பேருந்துகளுக்கு இப்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே படிப்படியாக டந்த காலத்தில் பேருந்து வாங்கப்படாமல் இருந்து பழைய பேருந்து ஓட்டுகின்ற சூழ்நிலையில் இருந்து பேருந்துகளை எல்லாம் மாற்றிக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக ஒன்றிய அரசு 15 ஆண்டுகள் ஓடிய பேருந்துகளை அகற்றவேண்டும் என்று சொல்லியுள்ளது. இந்நிலையில் அந்தப் பேருந்து எல்லாம் இப்போது படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது’’ என்றார்.
The post வரும் மார்ச் மாதம் 500 எலெக்ட்ரிக் பஸ்கள் வர இருக்கிறது: சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.