
திருப்பதி,
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மாதந்தோறும் முதல் செவ்வாய்கிழமை உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இம்மாதம் 6-ம் தேதி உள்ளூர் மக்கள் திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்கான டோக்கன்கள் நாளை வழங்கப்படவுள்ளன.திருப்பதி மகதி கலையரங்கம் மற்றும் திருமலை பாலாஜி கலைநகர் திருமண மண்டபத்தில் இதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்த டோக்கன்கள் நாளை அதிகாலை 5 மணிமுதல் வழங்கப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்படும். திருப்பதி நகர்ப்புறம், திருப்பதி கிராமப்புறம், சந்திரகிரி மற்றும் ரேணிகுண்டா மண்டலங்களை சேர்ந்த உள்ளூர் மக்கள் நாளை காலை முதல் தங்களுடைய ஆதார் கார்டை காண்பித்து தரிசன டோக்கனை வாங்கி செல்லலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.