வரும் 25ம் தேதி ரேஷன் கடை குறைதீர் கூட்டம்

3 weeks ago 7

 

தஞ்சாவூர், ஜன.11: தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறியதாவது: பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக்கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 25ம் தேதி, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post வரும் 25ம் தேதி ரேஷன் கடை குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article