வரும் 24ம் தேதி புத்தக கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்

2 weeks ago 2

 

திருவாரூர், ஜன.18: திருவாரூர் மாவட்டத்தில் 3வது புத்தக கண்காட்சியானது வரும் 24ம் தேதி துவங்க இருப்பதையடுத்து புத்தக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3வது புத்தக கண்காட்சி வரும் 24ந் தேதி முதல் அடுத்த மாதம் 2ந் தேதி வரை திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் மாநிலம் முழுவதும் இருந்தும் ஏராளமான பதிப்பகத்தினரையும் பங்கு பெற உள்ளனர்.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புத்தக கண்காட்சியை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ப்ளக்ஸ் பேனர், சுவரொட்டி விளம்பரம், வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்டவைகளில் தொடர்ந்து விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு மாணவரும் புத்தகம் வாங்குவதற்கான சேமிப்புத்திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கண்காட்சி நடைபெறவுள்ள இடத்தில் புத்தக அரங்குகளுக்கான கொட்டகை அமைக்கும் பணியானது தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் புத்தக கண்காட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கும் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

The post வரும் 24ம் தேதி புத்தக கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article