கரூர், ஜன. 18:மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் மாதத்திற்கு ஒரு முறை வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டங்களை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, கருர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் வருவாய் கோட்ட அளவில் மாதத்திற்கு ஒரு முறை நடத்திடும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2வது செவ்வாய்கிழமைகளில் குளித்தலை உதவி ஆட்சியர் அலுவலகத்திலும், ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமைகளில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகததிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 22ம்தேதி புதன் கிழமை அன்று கருர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு தக்க சான்றுகளுடன் விண்ணப்பங்களை நேரில் அளித்து பயன்பெறலாம்.
The post வரும் 22ம் தேதி மாற்றுத்திறனாளிகள் சிறப்புகுறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.