பேரவையில் கேள்வி நேரத்தின்போது அசோக்குமார் எம்எல்ஏ பேசுகையில், பேராவூரணி பேரூராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நகராட்சியாக தரம் உயர்த்தி தரப்படுமா என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இந்த ஆண்டு கழிவுநீர் திட்ட பணிகள் முன்னுரிமை கொடுத்து எடுக்கப்படும்.
மேலும், வருவாய் மற்றும் மக்கள் தொகை இருப்பின் நகராட்சியாக தரம் உயர்த்தி தரப்படும். இந்தாண்டு 25 பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தினால் எங்களது பணி உயர்வு பாதிக்கிறது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதனை எல்லாம் கணக்கில் கொண்டு நகராட்சியாக தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று பதில் அளித்தார்.
The post வருமானமும் மக்கள் தொகையும் இருந்தால் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த பிரச்சனையில்லை: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு appeared first on Dinakaran.