
சென்னை,
2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் வியூகம் அமைத்து வருகிறது. த.வெ.க. கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். த.வெ.க. தலைவர் விஜய்யின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் அருண்ராஜ் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை மத்திய நிதியமைச்சகம் ஏற்று கொண்டது. அரசு பணியை ராஜினாமா செய்துள்ள அருண் ராஜ், த.வெ.க.வில் இணையும் பட்சத்தில் அவருக்கு இணை பொதுச்செயலாளர் அல்லது துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.