வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றி என்ற இலக்கோடு களம் காணுவோம்: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

1 month ago 5

பெரம்பூர்: வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கோடு களம் காணுவோம், என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார். திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பாக ‘மக்களின் பெருந்துணையானவர் வரலாற்றின் திருப்புமுனையானவர்’ என்ற தலைப்பில் புகழரங்கம் சென்னை பெரியார் நகரில் நேற்று முன்தினம் நடந்தது.

திமுக இளைஞரணி செயல்வீரர் கார்த்திக் ஏற்பாடு செய்திருந்தார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில், உயர்க்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் இளம் பேச்சாளர்கள் செங்கல்பட்டு ரிஷி சந்தோஷ், காஞ்சிபுரம் எஸ்.யாசர் அராபத் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ‘‘வடசென்னையின் வரலாற்று மிக்க ஒரு பகுதி.

வணிக ரீதியாக இருந்தாலும் சரி, எதுவாயினும் வடசென்னை தான். 2026ல் நமது முதலமைச்சரை மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்த பிறகுதான் நமக்கு ஓய்வு என்பது இருக்க வேண்டும் என நாம் சபதம் ஏற்க வேண்டும்’’ என்றார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது திராவிட இயக்கம். ஒருமுறை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் துணை முதலமைச்சர் உதயநிதியின் காரில் ஏற முயற்சித்தார்.

இதனை கேள்விப்பட்ட உதயநிதி கூறுகிறார், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நீங்கள் தாராளமாக எனது காரை எடுத்துக்கொண்டு போங்கள். ஆனால் கமலாலயம் பக்கம் மட்டும் போய்விடாதீர்கள் என்று. இது நகைச்சுவைக்காக மட்டுமல்ல, பழனிசாமியே நீ திராவிட பாதையில் போ என்று எதிர் கட்சிக்கும் அரசியல் முக்தியை கற்றுக் கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். நான் சட்டக்கல்லூரியில் படிக்கும்போது சட்டக் கல்லூரிக்கு சென்ற காலங்களை விட அண்ணா அறிவாலயம் சென்றதுதான் அதிகம்.

கலைஞர் கலந்துகொண்ட கூட்டங்களுக்கு நான் சென்றது அதிகம். கூட்டங்களுக்கு அதிகமாக சென்ற என்னை உயர்கல்வித்துறை அமைச்சராக மாற்றிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கோடு களம் காணுவோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ஐசிஎப். முரளிதரன், நாகராசன், செயற்குழு உறுப்பினர் சந்துரு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

The post வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றி என்ற இலக்கோடு களம் காணுவோம்: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article