சென்னை: ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணிபுரிய வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணிபுரிய எக்கு கட்டமைப்பு உற்பத்தியாளர்கள், சிஎன்சி லேசர் வெட்டும் இயந்திர புரோகிராமர் மற்றும் ஆபரேட்டர், போர்க் லிப்ட் மற்றும் ஜேவிசி ஆபரேட்டர், ஹெவி பஸ் டிரைவர், பிரஸ் டோல் மற்றும் ஷீட் மெட்டல் டை தயாரிப்பாளர், சிஎன்சி பிளாஸ்மா கட்டிங் மெஷின் புரோகிராமர் மற்றும் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் பொறியாளர், உற்பத்தி பொறியாளர், க்யூ ஏ/ க்யூ சி ஆவணக் கட்டுப்படுத்தி, தொழில்துறை மின் எலக்ட்ரீஷியன், கருவி தொழில்நுட்ப வல்லுநர்கள் (ஆட்டோமேஷன்), டீசல் என்ஜின்கள் மற்றும் பட்டறை இயந்திர பராமரிப்பு, ஸ்பிளிட் ஏசி/ விண்டோ ஏசி/ சென்ட்ரல் ஏசி தொழில்நுட்ப வல்லுநர், ஸ்டோர் கீப்பர் ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் மற்றும் உணவு மற்றும் இருப்பிடம். வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலினை வருகிற 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இப்பணிகளுக்கான நேர்காணல் மே 3ம் தேதி, 4ம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் (பயோடேட்டா, பாஸ்போர்ட் ஒரிஜினல் மற்றும் காப்பி) மற்றும் போட்டோ ஆகியவற்றுடன்,”அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்), ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், 42. ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி சென்னை -32\\” என்ற முகவரிக்கு நேரில் அணுகவும். கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் இணையதளம் www.omomanpower.tn.gov.in 044-22502267 மற்றும் வாட்ஸ்அப் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வருகிற 25ம் தேதிக்குள் சார்ஜாவில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.