புதுக்கோட்டை, பிப்.10: புதுக்கோட்டை தெற்கு, 4ம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில் வராஹி அம்மன் சுமங்கலி மங்கள வைபவ வளையல் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் மங்கள பொருட்கள் வளையல்கள் வைத்து ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. கே.மணி மற்றும் ரவி, ஹரி, னிவாசன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் வராஹி அம்மனுக்கும் ஆஞ்சநேயர் மகா தீபாராதனை நடைபெற்றது. வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.
The post வராஹி அம்மனுக்கு வளையல் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.