சென்னை,
தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகும் தொடர்ந்து ஏற்றத்திலேயே தங்கம் விலை இருந்து வந்ததை பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டு இறுதி வரை ரூ.59 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலான இடைப்பட்ட விலையிலேயே தங்கம் விலை காணப்பட்டது.
எப்போது வேண்டுமானாலும் ரூ.60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி அந்த நிலையையும் எட்டியது. கடந்த 31-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ரூ.61,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.
இந்த சூழலில் மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது. இதன்படி நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.7,810 -க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இதன்படி வரலாற்றில் முதல்முறையாக சவரனுக்கு 63,000 கடந்தது தங்கம் விலை.
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.