வரதமாநதி அணையில் இருந்து இணைப்பு கால்வாய் அமைக்க வேண்டும்: பழநி பகுதி விவசாயிகள் கோரிக்கை

3 weeks ago 3

 

பழநி, டிச. 27: வரதமாநதி அணையில் இருந்து நல்லதங்காள் ஆற்றுக்கு இணைப்பு கால்வாய் அமைக்க வேண்டுமென பழநி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சிக்குட்பட்ட வரதமாநதி அணையின் உபரிநீரை நல்லதங்காள் ஆற்றுக்கு கொண்டு செல்ல இணைப்பு கால்வாய் அமைக்கும் பணிக்காக கடந்த 2015- 2016ம் நிதியாண்டில் தமிழக அரசால் ரூ.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் இத்திட்டம் உயிர்ப்பிக்கப்படவில்லை. இத்திட்டத்தின் மூலம் சுமார் 6 ஆயிரத்து 630 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பல்வேறு கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இத்திட்டத்திற்கு நில ஆர்ஜிதம் பெற வேண்டிய சூழ்நிலை இல்லை. எனவே இத்திட்டத்தை மீண்டும் உயிர்பித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post வரதமாநதி அணையில் இருந்து இணைப்பு கால்வாய் அமைக்க வேண்டும்: பழநி பகுதி விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article