வரதட்சணை கொடுமை: மாற்றுத்திறனாளி மனைவியை தீயில் தள்ளி கொன்ற கொடூர கணவன்

4 months ago 12

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பஹ்டோகி மாவட்டம் கவ்டர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் சுஸ்மா. கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சுஸ்மாவுக்கு கடந்த 2024 ஜனவரி மாதம் ராஜு கவுதம் என்பவருடன் திருமணமானது.

ராஜு கவுதமுக்கு ஏற்கனவே 3 முறை திருமணமாகி 2 மகள்கள் உள்ள நிலையில் 4வதாக சுஸ்மாவை திருமணம் செய்துள்ளார். அதேவேளை, தனக்கு பணம், பைக்கை வரதட்சணையாக கொடுக்குமாறு ராஜு கவுதம் அவரது மனைவி சுஸ்மாவை கொடுமை செய்துள்ளார். மேலும், சுஸ்மாவை அவ்வப்போது தாக்கியுள்ளார்.

இதனிடையே, கடந்த மாதம் 13ம் தேதி சுஸ்மாவிடம் மீண்டும் வரதட்சணை கேட்டு ராஜு தொல்லை செய்துள்ளார். பின்னர், வீட்டின் அருகே விரகுகளை கொண்டு மூடப்பட்ட தீயில் சுஸ்மாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் சுஸ்மா படுகாயமடைந்த நிலையில் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சுஸ்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த சுஸ்மா நேற்று சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். இதையடுத்து, ராஜு மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article