அரூர், ஜன.12: பெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால், அரூர் வட்டம் கீழ்மொரப்பூர், தாமரைகோழியம்பட்டி, ஈச்சம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பி நெல் வயலில் தண்ணீர் தேங்கியது.
மேலும் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்தது. மழை விட்டு வெயில் வந்தவுடன் அறுவடை செய்ய இருந்த விவசாயிகளை மேலும் அச்சுறுத்தும் வண்ணம், அடுத்த வாரமும் மழை பெய்தது. இதனால் சாய்ந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கின. முற்றிய நெற்கதிர்கள் என்பதால், தண்ணீரில் இருந்ததால் முளைத்து விட்டது. வயலில் தண்ணீர் ஊறி வெளியேறி கொண்டே இருப்பதால், இனி அந்த நெல்லை அறுவடையே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ₹35 ஆயிரம் வரை செலவு செய்,து ஒரு ரூபாய் கூட அதிலிருந்து எடுக்க முடியாத அளவிற்கு பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வயலில் சாய்ந்த பயிரில் முளை விட்டது appeared first on Dinakaran.