வயநாடு தொகுதியில் 3 நாட்கள் பிரியங்கா காந்தி சுற்றுப்பயணம்

2 hours ago 1

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பி பிரியங்கா காந்தி. நாளை மறுநாள் தனது சொந்த தொகுதிக்கு வருகிறார். தொடர்ந்து அவர் 8, 9 மற்றும் 10 தேதிகளில் காங்கிரஸ் தேர்தல் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது சட்டப்பேரவை தொகுதி வாரியாக பூத், தொகுதி கமிட்டி பொறுப்பாளர்களை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருக்கிறார்.

இதன்படி, 8ம் தேதி காலை 9.30 மணிக்கு மானந்தவாடியிலும் நண்பகல் 12 மணிக்கு சுல்தான் பத்தேரியிலும், மதியம் 2 மணிக்கு கல்பெட்டாவிலும் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள், அடிக்கடி ஊருக்குள் வரும் வனவிலங்குகளால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களுக்கு தீர்வு காண்பது உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

 

The post வயநாடு தொகுதியில் 3 நாட்கள் பிரியங்கா காந்தி சுற்றுப்பயணம் appeared first on Dinakaran.

Read Entire Article